அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

எரிசக்தி துறையில் ஆராய்ச்சிக்கான எனி சர்வதேச விருதை பாரதரத்னா பேராசிரியர் ராவ் பெற்றார்

Posted On: 27 MAY 2021 4:52PM by PIB Chennai

எரிசக்தி முன்கள விருது என்று அழைக்கப்படும் சர்வதேச எனி விருது 2020-ஐ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் மின்சார சேமிப்பு ஆகிய துறைகளில் தாம் செய்த ஆராய்ச்சிக்காக பாரதரத்னா பேராசிரியர் சி என் ஆர் ராவ் பெற்றுள்ளார்.

எரிசக்தி ஆராய்ச்சியில் நோபல் பரிசு என  இது கருதப்படுகிறது.

மனித குலத்தின் நன்மைக்கான ஒரே எரிசக்தி ஆதாரம் ஹைட்ரஜன் எரிசக்தி என்று கருதி அதில் முழு முனைப்புடன் பேராசிரியர் ராவ் பணியாற்றி வருகிறார். ஹைட்ரஜன் சேமிப்பு, பெட்ரோ ரசாயனம் மற்றும் எலக்ட்ரோ ரசாயனம் மூலம் ஹைட்ரஜன் உற்பத்தி, உலோகம் சாராத வினையூக்கம் போன்றவை அவரது பணியின் சிறப்பம்சங்களாகும்.

2021 அக்டோபர் 14 அன்று ரோமில் உள்ள குரினால் மாளிகையில் இத்தாலி குடியரசின் அதிபர், செர்ஜியோ மட்டாரெல்லா பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் எனி விருதுகள் 2020 வழங்கப்படும்.

எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விருதான எனி விருது, எரிசக்தி ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதையும், புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும். ரொக்கப்பரிசு மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தங்கப்பதக்கம் ஆகியவை வெற்றியாளருக்கு வழங்கப்படும்.

*****************



(Release ID: 1722232) Visitor Counter : 162