ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மியூகோமைகோசிஸ் சிசிச்சைக்காக மாநிலங்களுக்கு கூடுதலாக 29,250 ஆம்போடெரிசின்-பி குப்பிகள் ஒதுக்கீடு
Posted On:
26 MAY 2021 1:15PM by PIB Chennai
மியூகோமைகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 29,250 குப்பிகள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 24ம் தேதி கூடுதலாக 19,420 ஆம்போடெரிசின்-பி குப்பிகளும், கடந்த 21ம் தேதி அன்று 23,680 குப்பிகளும் நாடு முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நாடு முழுவதும் பல மாநிலங்களில், மியூகோமைகோசிஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, அந்த மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆம்போடெரிசின்-பி மருந்துகள் போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை கீழேயுள்ள இணைப்பில் பார்க்கவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721840
-------
(Release ID: 1721889)
Visitor Counter : 221