குடியரசுத் தலைவர் செயலகம்

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவரின் வாழ்த்து செய்தி

प्रविष्टि तिथि: 25 MAY 2021 6:57PM by PIB Chennai

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

புத்த பூர்ணிமா புனித நாளை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பகவான் புத்தரின் பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துன்பத்தில் இருந்து சுதந்திரத்தை நோக்கி புத்தரின் போதனைகள் நம்மை அழைத்து செல்கின்றன. வன்முறை மற்றும் அதர்மத்தில் இருந்து விலகி நிற்குமாறு புத்தர் செய்த போதனை, நல்ல மனிதர்களாக விளங்க நமக்கு நூற்றாண்டுகளாக ஊக்கமளித்து வருகிறது.

புத்தரின் வாழ்க்கையில் இரண்டற கலந்துள்ள அகிம்சை, அமைதி, கருணை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை, மற்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் அவரது போதனைகள் உலகெங்கிலும் உள்ள மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான ஊக்கமளித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று எனும் இதுவரை கண்டிறாத நெருக்கடியை நாம் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். இந்த புத்த பூர்ணிமா நன்னாளில், நமது உறுதி மற்றும் ஒற்றுமையின் மூலம், பெருந்தொற்றில் இருந்து வெற்றிகரமாக நாம் மீண்டு வந்து, மக்களின் நன்மையை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.”

------


(रिलीज़ आईडी: 1721755) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia