கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

முக்கிய துறைமுகங்களின் புயல் தயார்நிலையை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்

Posted On: 25 MAY 2021 6:27PM by PIB Chennai

யாஸ் புயலை எதிர்கொள்ள நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்களின் தயார்நிலையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு செய்தார்.

அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன:

* 24*7 கட்டுப்பாட்டு அறை அமைச்சகத்தில் நிறுவப்பட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல் படை உள்ளிட்ட இதர கட்டுப்பாட்டு

அறைகளுடன் ஒருங்கிணைப்பு.

* கப்பல் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

*உயர் மின் கோபுரங்களை கீழிறக்குமாறும், தேவையான பொருட்களை கொள்முதல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* துறைமுகங்களில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்படுள்ளனர்.

* கிரேன்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* துறைமுக பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

* ஜென்செட்கள், களன்கள், அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன.

* துறைமுகங்களின் உள்ளே மற்றும் வெளியில் உள்ள களன்கள் மற்றும் படகுகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.

------



(Release ID: 1721750) Visitor Counter : 170