மத்திய அமைச்சரவை

நாக்பூரில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அகாடமியில் இயக்குனர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 25 MAY 2021 1:17PM by PIB Chennai

நாக்பூரில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை அகாடமியில் இயக்குனர் பதவியை உருவாக்கவும், மாலத்தீவில் புதிய இந்திய துணை தூதரகம் திறக்கவும், ஐசிஓஏஐ, ஐசிஎஸ்ஐ ஆகிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இதில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.  நாக்பூரில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு  படை (என்டிஆர்எப்) அகாடமியில்  மூத்த நிர்வாக தரத்தில் இயக்குனர் பதவி ஒன்றை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் விருப்பம் தெரிவித்தது. இதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

என்டிஆர்எப் அகாடமியில் இந்த இயக்குனர் பதவி உருவாக்குவதன் மூலம், இந்த அமைப்பின்  தலைமை கட்டுப்பாடுஅனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் என்டிஆர்எப் அகாடமியை அதற்கான நோக்கங்களுடன் வழிநடத்த முடியும்.

இந்த என்டிஆர்எப் அகாடமி, தேசிய பேரிடர் மீட்புபடை, மாநில பேரிடர் மீட்பு படை, ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை ஆர்வலர்கள், சார்க் மற்றும் இதர நாடுகளின் வீரர்கள் 5000-க்கும் மேற்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும்  திறன் அடிப்படையிலான பயிற்சிகளை அளிக்கும். தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி திட்டங்களை இந்த அகாடமி மேம்படுத்தும். இதன் மூலம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினரின் பயிற்சியின் தரம் மேம்படும்.

மாலத்தீவில் புதிய துணை தூதரகம்:

மாலத்தீவின் அத்து நகரில், புதிய இந்திய துணை தூதரகம் திறக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாலத்தீவு இந்தியாவின் முக்கியமான அண்டை நாடாக உள்ளது. இரு நாடுகளும் இனம், மொழியியல், கலாச்சாரம், மதம்  மற்றும் வர்த்தக உறவுகள் பகிர்ந்து கொள்கின்றன. மாலத்தீவின் அத்து நகரில் இந்தியாவின் புதிய துணை தூதரகம் திறப்பதன் மூலம் மாலத்தீவில் இந்தியா தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையையும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவும். வரத்தகம் உட்பட இருதரப்பு உறவு அதிகரிக்கும். இதன் மூலம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்தியாவின் தற்சார்பு இந்தியா இலக்குக்கும் உதவியாக இருக்கும்.

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (ICoAl) மற்றும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனங்களின் (ICSI) புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பின்னேற்பு ஒப்புதல்:

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (ICoAl) மற்றும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் (ICSI) ஆகியவை பல வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.

ஆஸ்திரேலியாவில் உள்ள  பொது கணக்காளர்கள் நிறுவனம் (IPA), இங்கிலாந்தில் உள்ள  பங்குகள் மற்றும் முதலீடுகள் நிறுவனம் (CISI),  இங்கிலாந்தில் உள்ள பட்டய பொது நிதி மற்றும் கணக்கியல் நிறுவனம் (CIPFA),  இலங்கையில் உள்ள சான்றழிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள பட்டய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நிறுவனம் ஆகியவற்றுடன்  இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவனம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கு மத்திய அமைச்சரவை இன்று பின்னேற்பு ஒப்புதல் வழங்கியது.

இந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பரஸ்பர தகுதி அங்கீகாரம், அறிவு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான கூட்டுறவு நடவடிக்கைகள்ஆண்டு கருத்தரங்குகள்/பயிற்சி திட்டங்கள்/ பயிலரங்குகள்/ கருத்தரங்குகள்/ கூட்டு ஆய்வு திட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளவதன் மூலம் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை மேம்படும்

மேலும் இந்த ஒப்பந்தம், பயனடையும் நாடுகள் இடையே சமபங்கு, பொது பொறுப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய இலக்குகளை மேம்படுத்த உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721505

 

-----(Release ID: 1721591) Visitor Counter : 52