ஆயுஷ்

‘‘வீட்டிலிருந்தபடி யோகா செய்யுங்கள் ’’ என்பது பற்றி 5 இணைய கருத்தரங்குகளை நடத்துகிறது ஆயுஷ் அமைச்சகம்

प्रविष्टि तिथि: 23 MAY 2021 11:50AM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2021- முன்னிட்டு, பல நிகழ்ச்சிகளை ஆயுஷ் அமைச்சகம் நடத்துகிறது. அவற்றில் ஒன்றுவீட்டிலிருந்தபடி யோகா செய்யுங்கள்என்ற தலைப்பில் நடத்தப்படும் ஐந்து இணைய கருத்தரங்குகள் தொடர்.

இந்த கருத்தரங்குகள், நாட்டின் 5 பிரபல நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தலைப்பில் கருத்தரங்கை நடத்துகிறது. இவை தற்போதைய சூழலின் முக்கியத்துவத்தை குறிப்பதாக இருக்கும்.  

முதல் இணைய கருத்தரங்கு, ‘‘வெளிப்புற நெருக்கடிகளுக்கு இடையே உள் பலத்தை கண்டறிதல்’’ என்ற தலைப்பில் வாழும் கலை அமைப்பால் மே 24ம் தேதி திங்கள் கிழமை நடத்தப்படும். தற்போதைய கொரோனா தொற்று சூழலில், மிக முக்கியமான பிரச்சனைகளை பற்றி பார்வையாளர்களுக்கு நினைவூட்டுவதுதான், இந்த இணைய கருத்தரங்கு தொடர்களின் நோக்கம்.

கற்றல் மற்றும் பகிர்வு ஆகியவற்றின் தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட ஐந்து அமைப்புகளின் கூட்டு அனுபவ அறிவை சார்ந்து, தற்போதைய சிக்கல்களுக்கு தீர்வு காண ஒரு ஒட்டுமொத்த புரிதலை ஏற்படுத்த இந்த இணைய கருத்தரங்கு தொடர்கள்  முயற்சிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721018

 

----


(रिलीज़ आईडी: 1721052) आगंतुक पटल : 301
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu