சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் நிவாரண உதவிகள் குறித்த சமீபத்திய தகவல்கள்
Posted On:
22 MAY 2021 4:18PM by PIB Chennai
2021 ஏப்ரல் 27 முதல் பல்வேறு நாடுகள்/அமைப்புகளிடம் இருந்து கொவிட் தொடர்பான மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை இந்திய அரசு பெற்று வருகிறது.
கொவிட்-19 மேலாண்மை தொடர்பான முயற்சிகளுக்கு வலுவூட்டுவதற்காக இவை விரைவாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
2021 ஏப்ரல் 27 முதல் 2021 மே 21 வரை 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,901 ஆக்சிஜன் சலிண்டர்கள், 19 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள், 11,416 சுவாசக் கருவிகள் / பிபாப், ~6.6 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் சாலை மற்றும் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2021 மே 20/21 ஆகிய தேதிகளில் கத்தார், வேல்ஸ் அரசாங்கம் (இங்கிலாந்து) கனடா, யூஎஸ்ஐஎஸ்பிஎஃப், ஜெர்மனி ஆகிய இடங்களிலிருந்து வரப்பெற்றுள்ள முக்கிய பொருட்களின் விபரங்கள் வருமாறு:
ஆக்சிஜன் செறிவூட்டிகள் :
963
சுவாசக் கருவிகள்/பி-பாப்/சிபாப்
465
பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து பெறப்படும் பொருட்கள் உடனடியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த செயல்பாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
******************
(Release ID: 1720942)
Visitor Counter : 257