எரிசக்தி அமைச்சகம்
தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க, மௌடாவில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தின் நதி நீர் புதுப்பித்தல் திட்டம்
Posted On:
22 MAY 2021 11:17AM by PIB Chennai
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் தேசிய அனல் மின் நிலையம், மகாராஷ்டிரா மாநிலத்தின் மௌடாவில் உள்ள சுமார் 150 கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்குவதற்காக நிலத்தடி நீர் புதுப்பித்தல் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. மௌடா தாலுகாவில் அபரிமிதமாக தண்ணீரின் வரத்தை உருவாக்கிய ஜல்யுக்தா சிவார் யோஜனா திட்டத்திற்கு தனது பெருநிறுவன சமூக பொறுப்பின் முன்முயற்சியாக தேசிய அனல்மின் நிலையம் ஆதரவளித்து வருகிறது.
வாழும் கலை அமைப்பின் மகாராஷ்டிரா பிரிவும், இதர நிறுவனங்களும், மாநில அரசின் உதவியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்டன.
முன்னர், நாக்பூரில் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த தாலுக்காக்களில் ஒன்றாக மௌடா விளங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் மௌடா, ஹின்க்னா, கம்ப்டீ ஆகிய தாலுக்காக்களில் 200க்கும் மேற்பட்ட பகுதிகள் பயனடைந்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 150 கிராமங்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்தன. இதனை செயல்படுத்துவதற்குத் தேவைப்பட்ட உபகரணங்கள் மற்றும் கருவிகளின் எரிபொருளுக்கு சுமார் ரூ. 78 லட்சத்தை தேசிய அனல் மின் நிலையம், மௌடா வழங்கியது.
இதேபோல் 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட 5 குளங்களை புதுப்பிக்கும் திட்டத்திற்கும் இந்த நிறுவனம் ரூ. 1 கோடியை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720818
*****************
(Release ID: 1720928)
Visitor Counter : 254