எரிசக்தி அமைச்சகம்
ஒடிசாவில் கொவிட்-19 பராமரிப்பிற்கு பவர் கிரிட் நிறுவனத்தின் முன்முயற்சிகள்
प्रविष्टि तिथि:
22 MAY 2021 4:05PM by PIB Chennai
இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒடிசா திட்ட வளாகத்திலுள்ள ரூர்கேலா துணை மின் நிலையத்தை கொவிட்டில் இருந்து 100 சதவீதம் பாதுகாப்பதற்காக, கொவிட் பாதிப்புகள் மேலும் அதிகரிக்காத வண்ணம் செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
2021 மே 19 அன்று நடைபெற்ற மிகப்பெரிய பரிசோதனை (துரித ஆன்டிஜென்) முகாமில் துணை மின்நிலையத்தின் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
அங்குல் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற மிகப்பெரிய தடுப்புமருந்து வழங்கல் முகாமில், பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட சுமார் 100 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பாரிபாடா, கணிஹா மற்றும் போலாங்கிர் துணை மின் நிலையங்களிலும் இதேபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டன.
******************
(रिलीज़ आईडी: 1720919)
आगंतुक पटल : 222