ரெயில்வே அமைச்சகம்

ஒரே நாளில் சாதனை அளவாக 1118 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்தன ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

Posted On: 21 MAY 2021 2:08PM by PIB Chennai

இந்திய ரயில்வே இதுவரை சுமார் 13,319 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பல மாநிலங்களுக்கு 814-க்கும் மேற்பட்ட டேங்கர்கள் மூலம் விநியோகித்துள்ளது.

இதுவரை 208 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தை முடித்து பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை  அளித்துள்ளன.

தற்போது, 13 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1018 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனுடன் பயணித்து வருகின்றன.

கடந்த 5 நாட்களாக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்து வருகின்றன.

உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் என 13 மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக்ஸிஜனை கொண்டு சென்றுள்ளன.

தற்போது வரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3338, மத்தியப் பிரதேசத்துக்கு521, தில்லிக்கு 4110, ஹரியானாவுக்கு 1619, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 714, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழ்நாட்டுக்கு 649, ஆந்திராவுக்கு 292, பஞ்சாப்புக்கு 153, கேரளாவுக்கு 118, தெலங்கானாவுக்கு 772 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் பல ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு பல மாநிலங்களுக்கு புறப்படுகின்றன.

*****************



(Release ID: 1720629) Visitor Counter : 194