இந்திய போட்டிகள் ஆணையம்
இந்திய போட்டியியல் ஆணைய (பொது) விதிமுறைகள், 2009-ன் 35வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அமலில் இருக்கும் ரகசியத்தன்மை முறையை ஆய்வு செய்வதற்காக வரவேற்கப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களுக்கான காலக்கெடு கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2021 6:04PM by PIB Chennai
மேற்கண்ட தலைப்பு குறித்து இந்திய போட்டியியல் ஆணையத்தால் 2021 ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் படி (இணைப்பு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711420) ரகசியத்தன்மை முறையை உருவாக்குவதற்கான விரிவான மாதிரி திட்டம் ஒன்று பொதுமக்கள் ஆலோசனைக்காக ஆணையத்தின் இணையதளத்தில் பொது விதிமுறைகளின் 35-வது விதிமுறையை திருத்திய மாதிரியோடு வெளியிடப்பட்டது. 2021 மே 12-க்குள் பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்பட்டன.
இது தொடர்பாக, கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு காலக்கெடுவை நீட்டிக்குமாறு பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான கடைசி தேதியை ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ஆணையம் முடிவு எடுத்துள்ளது. இதன் படி, 2021 ஜூன் 11-க்குள் கருத்துகளை atdregistry@cci.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1719736)
வருகையாளர் எண்ணிக்கை : 227