அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19-ன் பல்வேறு வகைகளை கண்டுபிடிக்கும் புதிய ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிறுவனம் உருவாக்கியுள்ளது

Posted On: 18 MAY 2021 5:21PM by PIB Chennai

சர்வதேச பெருந்தொற்றுக்கு  காரணமான கொவிட்-19-ன் பல்வேறு வகைகளை துல்லியமான முறையில் கண்டுபிடிக்கும் புதிய ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவியை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  உருவாக்கியுள்ளது.

தனது பல்வேறு வகைகளோடு பெருந்தொற்றின் இரண்டாம் அலை தற்போது நிலவி வரும் நிலையில், வைரஸை கண்டறிவதற்காக இந்த புதிய பலமுனை ஆர்டி-பிசிஆர் சோதனை முறை முக்கியத்துவம் பெறுகிறது.

ஆர்டிஆர்பி மற்றும் ஓஆர்எஃப்பி- என்எஸ்பி14 ஆகிய 2 சார்ஸ் கோவி 2 மரபணுக்களையும் மனித ஆர்என்ஏஎஸ்ஈபி மரபணுவையும் இந்த பரிசோதனை முறை குறி வைக்கிறது. இதன் மூலம் பல்வேறு வைரஸ் வகைகளைக் கண்டறிய முடியும்.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இந்த கருவியை பாதுகாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, இது 97.3 சதவீதம் உணர் திறனுடனும் கொவிட்டை கண்டறிவதில் 100 சதவீதம் செயல் திறனுடனும் இருப்பதாக சான்றளித்துள்ளது. இந்த கருவியை வர்த்தகமய படுத்துவதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த ஹுவெல் லைப் சயின்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் 2021 மே 14 அன்று ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

"கொவிட்டுக்கு எதிரான நாட்டின் போரில் இந்த பிரத்தியேக ஆர்டி-பிசிஆர் சோதனைக் கருவி முக்கிய ஆயுதமாக இருக்கும்," என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறினார்.

**


(Release ID: 1719727) Visitor Counter : 232