நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி விற்பனைக்கான ஏல நடைமுறைகளுக்கு சிறப்பான வரவேற்பு

Posted On: 18 MAY 2021 5:04PM by PIB Chennai

நிலக்கரி விற்பனைக்காக  நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்புப் பிரிவுகள்) சட்டம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரி சுரங்கங்களில் ஏல நடைமுறையை மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட முகமை கடந்த மார்ச் 25 அன்று தொடங்கியது. ஆற்றல் மிகுந்த நிலக்கரிச் சந்தை, பொருளாதார வளர்ச்சிக்குஊக்குவிப்பு மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், இந்திய நிலக்கரித் துறையில் செயல்திறன், போட்டித் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தித் தனியார் துறையும் பங்கேற்கும் வகையில் நிலக்கரியின் விற்பனைக்காக ஏலத்தின் இரண்டாவது கட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதுநாள் வரை குறிப்பிட்ட 50 சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து ஒப்பந்தங்களை வாங்கி வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தபிறகு விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட சுரங்கங்களை நேரில் சென்று காண்பதற்கு ஏதுவாக ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719625

-----




(Release ID: 1719723) Visitor Counter : 145