சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பூஞ்சைத் தொற்று தடுப்பு மருந்து அதிகளவில் கிடைக்க நடவடிக்கை: கொவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தகவல்

Posted On: 17 MAY 2021 5:04PM by PIB Chennai

பூஞ்சை தொற்று மருந்து அம்போடெரிசின்-பிஅதிகளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாககொவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 26வது கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தலைமை தாங்கினார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஹர்தீப்சிங் பூரி, கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த ராய், சுகாதாரத்துணை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே பால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

கொவிட் சிகிச்சைக்கு 2-டிஜி மருந்தை பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள் உருவாக்கியதை டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டினார். கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கையில் இந்த மருந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

இன்சாகாக் நெட்வொர்க்கில் தற்போது நாடு முழுவதும் 10 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நெட்வொர்க்கில் 17 புதிய பரிசோதனை கூடங்கள் இணைக்கப்படவுள்ளதாக, மத்திய அமைச்சர்களிடம் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மியூகோ மிகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் அம்போடெரிசின்-பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாக மருந்துகள் துறை செயலாளர் டாக்டர் எஸ்.அமர்னா இந்தகூட்டத்தில் சுட்டிக் காட்டினார். இவற்றை விநியோகிக்கும் 5 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவற்றை உகந்த முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த 1ம் தேதி முதல் 14ம் தேதிவரை மாநிலங்களுக்கு இந்த மருந்து 1 லட்சம் குப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை இறக்குமதி செய்வதற்கான வழிகள் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோவின் தளம், அடுத்த வாரத்துக்குள் இந்தி உட்பட 14 மாநில மொழிகளில் பயன்படுத்த முடியும் என இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719352

*****************



(Release ID: 1719437) Visitor Counter : 180