பாதுகாப்பு அமைச்சகம்

டவ்-தே புயலை சமாளிக்க பாதுகாப்புபடைகள் மேற்கொள்ளும் பணிகள்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted On: 17 MAY 2021 4:31PM by PIB Chennai

டவ்-தே புயலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்க பாதுகாப்பு படைகளின் தயார் நிலை மற்றும் உள்ளூர் நிர்வாகத்துக்கு செய்துவரும் உதவிகள் குறித்து அறிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய் குமர், கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா, தரைப்படை தளபதி ஜெனரல் எம்எம் நரவானே, டிஆர்டிஓ தலைவர் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்திய கடற்படையின் 11 டைவிங் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்படும் மாநிலங்கள் வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் உடனடியாக அனுப்பப்படுவர் என திரு ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. வெள்ள மீட்பு பணிக்காக 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் பாதிப்புக்குப்பின் மீட்பு பணியை மேற்கொள்ளவும், குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

 

தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்க தல்வார், தர்கஷ் மற்றும் தபார் ஆகிய 3 கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலில் மீனவர்கள் படகு ஏதாவது சிக்கினால், அவர்களுக்கு உதவ கடற்படையின் மேற்கு கட்டுப்பாட்டு மண்டலத்தில் போர்க் கப்பல்கள் தயார்நிலையில் உள்ளன. கடற்படையின் கண்காணிப்பு விமானம், புயல் குறித்த எச்சரிக்கைகளை மீனவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

ஜாம்நகரிலிருந்து இரண்டு ராணுவப் படைகள், டையு பகுதிக்கு அனுப்பப்ட்டுள்ளதாகவும் திரு ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் நிர்வாகத்துக்கு முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் வழங்கும்படி முப்படைகளுக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719341

*****************



(Release ID: 1719428) Visitor Counter : 181