எரிசக்தி அமைச்சகம்

கொவிட்டை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை பவர்கிரிட் எடுத்து வருகிறது

Posted On: 15 MAY 2021 5:12PM by PIB Chennai

இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னாநிறுவனமான பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், நாடு முழுவதுமுள்ள தன்னுடைய அலுவலகங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு தக்க நேரத்தில் உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கு தடுப்பு மருந்தே முக்கிய ஆயுதம் என்பதால், தனது பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பு மருந்து வழங்குவதற்கான முகாம்களை நாடு முழுவதும் பவர்கிரிட் நடத்தி வருகிறது.

பாதிப்படைந்துள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு சேவையை பவர்கிரிட் வழங்குகிறது. 2020-ம் ஆண்டு பெருந்தொற்றின் போது குருகிராமில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மானேசரில் புதிய தனிமைப்படுத்தப்பட்ட மையத்தையும் பவர்கிரிட் நிறுவி வருகிறது.

ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இந்த மையத்தில் 50 படுக்கைகள் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் உருளைகள், மருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரூ 1,14,30,000/- மதிப்பிலான தீவிர சிகிச்சை பிரிவு சுவாசக் கருவிகளை அரசு மருத்துவ கல்லூரி, சந்திராப்பூருக்கு பவர்கிரிட் வழங்கியுள்ளது. இவ்வாறு மேலும் பல நடவடிக்கைகளை பவர்கிரிட் எடுத்து வருகிறது.

*****************



(Release ID: 1718928) Visitor Counter : 161