புவி அறிவியல் அமைச்சகம்

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்பு

प्रविष्टि तिथि: 14 MAY 2021 10:05AM by PIB Chennai

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறி, மே 18 ஆம் தேதி குஜராத் கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலைத்துறையின், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக தீவிரமடையும் வாய்ப்புள்ளது.  இது மேலும் தீவிரமடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் குஜராத் மற்றும் அதனையொட்டியுள்ள பாகிஸ்தான் கடற்கரையை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. இந்த புயல், மே 18ம் தேதி மாலை குஜராத் கடற்கரையை நெருங்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718486

*****************


(रिलीज़ आईडी: 1718603) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Punjabi , Kannada