எரிசக்தி அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பூசி முகாம் நடத்தியது மின்துறை அமைச்சகத்தின் ஆர்இசி நிறுவனம்

प्रविष्टि तिथि: 13 MAY 2021 6:29PM by PIB Chennai

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி, தில்லி அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து கொவிட் தடுப்பூசி முகாம் நடத்தியது.

இதில் மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 500 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அப்போலோ மருத்துவ குழுவினருக்கு ஆர்இசி நிறுவன ஊழியர்கள் கைதட்டி வரவேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718346

*****************


(रिलीज़ आईडी: 1718392) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu