உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து தங்குதடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது புவனேஸ்வர் விமான நிலையம்

Posted On: 13 MAY 2021 12:50PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் வலிமையை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், தினமும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் இயங்கும் புவனேஸ்வர் விமான நிலையமும் அதன் பங்குதாரர்களும் இந்தப் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு, நாள்முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து தங்குதடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கின்றன.

மே 9-ஆம் தேதி வரை புவனேஸ்வர் விமான நிலையத்தின் வாயிலாக பல்வேறு விமானங்களில் 20.53 மெட்ரிக் டன் தடுப்பூசிகள் அடங்கிய மொத்தம் 669 பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிராண வாயுவின் தேவையை நிறைவேற்றுவதற்காக ஏப்ரல் 23 முதல் மே 11-ஆம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு சொந்தமான 75 விமானங்களில் மொத்தம் 156 காலி பிராணவாயு டேங்கர்கள், 526 பிராணவாயு செறிவூட்டிகள், 140 பிராணவாயு சிலிண்டர்கள் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் பிராணவாயு செறிவூட்டிகளின் 41 பாகங்களும் பல்வேறு விமானங்கள் வாயிலாக கொண்டு செல்லப்பட்டன. 10 லிட்டர் சீம்லெஸ் சிலிண்டர்களின் 3500 பாகங்களும், 46.7 லிட்டர் சீம்லெஸ் சிலிண்டர்களின் 1520 பாகங்களும் ஒரு வாரத்திற்குள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718233

*****************



(Release ID: 1718285) Visitor Counter : 218