பாதுகாப்பு அமைச்சகம்
முக்கியமான மருத்துவ பொருட்களுடன், நியூ மங்களூர் துறைமுகம் வந்தன 2 கடற்படை கப்பல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2021 6:40PM by PIB Chennai
ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் தபார் என்ற 2 கடற்படை கப்பல்கள் குவைத்திலிருந்து முக்கிய மருத்துவ பொருட்களுடன் இன்று நியூ மங்களூர் துறைமுகம் வந்தடைந்தன.
‘சமுத்ர சேது 2’ என்ற பெயரில் கொவிட் நிவாரண நடவடிக்கையில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பல போர்க்கப்பல்கள், வெளிநாடுகளில் இருந்து மருந்துவ பொருட்களை கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் ஐஎன்எஸ் கொச்சி மற்றும் தபார் என்ற இரு போர்க்கப்பல்கள் முக்கியமான மருத்துவ பொருட்களுடன் இன்று நியூ மங்களூர் துறைமுகம் வந்தன.
குவைத்திலிருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட இந்த கப்பல்கள், 5 கன்டெய்னர்களில் 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன், 1200 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு வந்துள்ளன.
இவைகள் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1717810)
வருகையாளர் எண்ணிக்கை : 236