ரெயில்வே அமைச்சகம்
ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை பெறும் 9வது மாநிலம் உத்தரகாண்ட் : பல மாநிலங்களுக்கு 5735 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் விநியோகம்
Posted On:
11 MAY 2021 5:17PM by PIB Chennai
இந்திய ரயில்வே இதுவரை, பல மாநிலங்களுக்கு 375-க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 5735 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்துள்ளது. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று, 755 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை விநியோகித்தன.
இதுவரை 90க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன.
வேண்டுகோள் விடுக்கும் மாநிலங்களுக்கு, கூடிய விரைவில் ஆக்ஸிஜன் விநியோகிக்க இந்திய ரயில்வே முயற்சிக்கிறது.
தற்போது வரை மகாராஷ்டிராவில் 293 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்தில் 1630 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்தில் 340 மெட்ரிக் டன், ஹரியானாவில் 812 மெட்ரிக் டன், தெலங்கானாவில் 123 மெட்ரிக் டன், ராஜஸ்தானில் 40 மெட்ரிக் டன், கர்நாடகாவில் 120 மெட்ரிக் டன், தில்லியில் 2383 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன், மகாராஷ்டிராவின் புனே ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களும் முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை பெறவுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு செல்கிறது. ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இங்கு கொண்டு செல்லப்படுகிறது.
புனேவுக்கும் முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று செல்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள் ஆங்குலில் இருந்து 50 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இங்கு கொண்டு செல்லப்படுகிறது.
புதிய ஆக்ஸிஜன் ரயில்களை இயக்குவது ஆற்றல் வாய்ந்த பணியாக உள்ளது. இது குறித்த தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது. இன்னும் அதிக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----
(Release ID: 1717795)
Visitor Counter : 200