அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட் மறு எழுச்சியை நிவர்த்தி செய்வது குறித்து , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னோக்குடன் நிபுணர்கள் மற்றும் இதர தரப்பினர் விவாதம்

Posted On: 11 MAY 2021 1:17PM by PIB Chennai

கொவிட் மறு எழுச்சியால் ஏற்பட்டள்ள அவசர நிலையை நிவர்த்தி செய்யும் சிறந்த அணுகுமுறை குறித்து பல துறை நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் நேற்று விவாதித்தனர்.

‘‘கொவிட் மறுஎழுச்சியை நிவர்த்தி செய்தல் - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னோக்கு’’ என்ற தலைப்பிலான ஆன்லைன் கூட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி அமைப்பான தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீடு கவுன்சில் (டிஐஎப்ஏசி) நடத்தியது. இந்த கூட்டம் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், தொழில் துறையினர், கொள்கை உருவாக்குபவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்தது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து இவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்

டிஐஎப்ஏசி நிர்வாக கவுன்சில் தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:

நாட்டில் ஆக்ஸிஜன் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால் ஆக்ஸிஜன் விநியோக கட்டமைப்பு  வலுவாக இல்லைஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற முக்கிய சாதனங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்துள்ளது. தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப் பொருளுக்கும் நாம் இதர நாடுகளைச் சார்ந்துள்ளோம். அதனால் மருந்து மூலப் பொருட்களை நாட்டில் தயாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நமது சுகாதார கட்டமைப்பின் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக மருத்துவ ஊழியர்கள், எம்பிபிஎஸ் முடித்து வரும் மருத்துவர்கள் ஆகியோருக்கு குறுகியகால பயிற்சி அளிக்க அறிவில் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மரபணு ஆராய்ச்சி வசதிகளை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசிகள், மருந்துகள் விநியோகத்தில் ட்ரோன்களை பயன்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்தடுப்பூசி உற்பத்தி மேலாண்மை மூலம்தொற்று பரவலை தடுக்க, இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் சரஸ்வத் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717628

----



(Release ID: 1717732) Visitor Counter : 158