நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2021 5:28PM by PIB Chennai

உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும் ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.

அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.

இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர்ஒரு லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சுமார் 2 கோடி பயனாளிகளுக்கு 12 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோதுமையின் கொள்முதலுக்காக விவசாயிகளின் நேரடி வங்கிக் கணக்கில் ரூ. 49,965 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 26.3 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவற்றில் சுமார் 18.3 கோடி பரிவர்த்தனைகள் 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரையில் கொவிட்-19 காலகட்டத்தில் பதிவாகி இருப்பதாகவும், புலம்பெயர் மக்கள் இதனால் பெருமளவில் பயனடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717457

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1717530) வருகையாளர் எண்ணிக்கை : 262
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu