உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

மருத்துவ உபகரணங்களின் விநியோகம்: தடையில்லாத சேவையில் கொல்கத்தா விமான நிலையம்

Posted On: 09 MAY 2021 5:45PM by PIB Chennai

கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு தீவிரமாக போராடி வருவதுடன், தடுப்பூசிகள், பிராணவாயு செறிவூட்டிகள், ஆக்சிமீட்டர் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களின் தேவை பெரும் மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தப் போரில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்தும் பல்வேறு  விமான நிலையங்களும், விமான நிறுவனங்களும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை பல்வேறு நகரங்கள்/ மாநிலங்களுக்கு  கொண்டு சேர்க்கும் பணியில் இடையறாது ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், கொல்கத்தா விமான நிலையம் இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. போர்ட் பிளேயர், சிக்கிம், அகர்தலா, குவஹாத்தி, இம்பால், எய்சால், மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தடுப்பூசிகளும் பிராணவாயு செறிவூட்டிகளும் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

அதேபோல தோஹா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள், மும்பை, புனே போன்ற நகரங்களிலிருந்தும் தடுப்பூசிகள், பிராணவாயு செறிவூட்டிகள் போன்ற மருத்துவ உபகரணங்களும்  இந்த விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717256

*****************


(Release ID: 1717278)