சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவுக்கு உலகநாடுகள் நன்கொடையாக அளித்த கொவிட்-19 நிவாரண பொருட்கள் மற்றும் மாநிலங்களுக்கான விநியோகம்

Posted On: 09 MAY 2021 4:59PM by PIB Chennai

பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள்  நன்கொடையாக அளிக்கும் கொவிட்-19 நிவாரண பொருட்களை, மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது.

மொத்தம் 6738 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3856 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 16 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 4668 வென்டிலேட்டர்கள், சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன.

கனடா, தாய்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா அமெரிக்காவின் ஜிலெட், சேல்ஸ்போர்ஸ், தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் அமைப்பு ஆகியவற்றிடமிருந்து மே 8ம் தேதி வந்த முக்கிய பொருட்கள்:

* ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (2404)

* ரெம்டெசிவிர் (25,000)

* வென்டிலேட்டர்கள் (218)

* பரிசோதனை கருவிகள் (6,92,208)

இந்த பொருட்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  இவற்றை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

வெளிநாட்டு உதவியாக மருத்துவ சாதனங்கள் அனுப்பிய அனைவருக்கும் புதுதில்லி எய்ம்ஸ் இயக்குனர் பேராசிரியர் ரந்தீப் குலேரியா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுவரை 80 வென்டிலேட்டர்கள், 80 டிராலிகள், 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 1 லட்சம் முககவசங்கள், 5000 அறுவை சிகிச்சை உடைகள் வெளிநாட்டு நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக போபால் எய்ம்ஸ் இயக்குனர் போராசிரியர் டாக்டர் சர்மன் சிங் தெரிவித்தார்.

50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 64 ஜம்போ சிலிண்டர்கள்  பெற்றதாக ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவர் டாக்ட்ர நிதின் நகர்கர் தெரிவித்தார்.

வெளிநாட்டு கொவிட் நிவாரண பொருட்களை பெற்று அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ஒரு பிரத்தியாக ஒருங்கிணைப்பு பிரிவு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. இதற்காக நிலையான செயல்பாட்டு நடைமுறை உருவாக்கப்பட்டு கடந்த 2ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

*****************  



(Release ID: 1717273) Visitor Counter : 179