புவி அறிவியல் அமைச்சகம்
மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு; ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி மற்றும் நீண்ட கால ஒத்துழைப்புக்கான திட்டங்களை பகிர்ந்தது
Posted On:
08 MAY 2021 7:30PM by PIB Chennai
ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்கான தளமான மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தில் (2021 மே 8-9) இந்தியா பங்கேற்று வருகிறது.
கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஆர்க்டிக் பகுதியில் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் ஆராய்ச்சி, பணிகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த நீண்ட கால திட்டங்களை பங்குதாரர்களுடன் பகிர்ந்தார்.
ஆய்வு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான தரவுகளை பகிர்தல் ஆகியவற்றில் நிலவும் ஒத்துழைப்புகளை அவர் வரவேற்றார். “ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு, ஆராய்ச்சி, திறன் வளர்த்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் பிராந்தியத்தில் நீடித்த வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் நேர்மறை பங்களிப்பை இந்தியா தொடர்ந்து வழங்கும்,” என்று திரு ஹர்ஷ் வர்தன் கூறினார்.
அடுத்த அல்லது வருங்காலத்தில் நடைபெற உள்ள ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை இந்தியா ஏற்பாடு செய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து இந்தியாவின் இஸ்ரோ ஏவவிருக்கும் நைசெர் செயற்கைக்கோளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீடித்த ஆர்க்டிக் ஆய்வு வலைப்பின்னலுக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
-------
(Release ID: 1717115)
Visitor Counter : 302