சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்லும் டேங்கர்களுக்கு சுங்க கட்டணத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விலக்களித்துள்ளது

Posted On: 08 MAY 2021 6:41PM by PIB Chennai

திரவ மருத்துவ ஆக்சிஜனை எடுத்து செல்லும் டேங்கர்கள் மற்றும் கொள்கலன்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையின்றி முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, சுங்கச்சாவடிகளில் அவ்வகையான வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தேவையை கருத்தில் கொண்டு, திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால ஊர்திகளுக்கு இணையாக இரண்டு மாத காலத்திற்கு அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும் வரை கருதப்படும்.

பாஸ்டேக் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து சுங்கச்சாவடிகளில் நேரம் வீண் ஆவதில்லை என்ற போதிலும், மேற்கண்ட வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அரசு மற்றும் தனியாரின் முயற்சிகளுக்கு உதவுமாறு தனது அனைத்து அலுவலர்கள் மற்றும் இதர பங்குதரர்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் வரலாறு காணாத தேவை ஏற்பட்டுள்ள நிலையில், திரவ மருத்துவ ஆக்சிஜனை சரியான நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியமாகிறது. எனவே, அதைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

-----



(Release ID: 1717105) Visitor Counter : 20