பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ காவல் படையில் மகளிர் காவலர்களின் முதல் பிரிவு இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
प्रविष्टि तिथि:
08 MAY 2021 5:03PM by PIB Chennai
பெங்களூருவில் உள்ள ராணுவ காவல்படை மையம் மற்றும் பள்ளியில், 83 மகளிர் காவலர்களின் முதல் பிரிவு இந்திய ராணுவத்துடன் இணையும் நிகழ்வைக் குறிக்கும் அணிவகுப்பு, துரோணாச்சாரியா மைதானத்தில் மே 8-ஆம் தேதி நடைபெற்றது.
அணிவகுப்பை மேற்பார்வையிட்ட ராணுவ காவல்படை மையம் மற்றும் பள்ளியின் படைத்தலைவர், புதிதாக இணைய உள்ள மகளிர் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அடிப்படை இராணுவப் பயிற்சி, காவல் படை பணிகள், போரில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருப்பவர்களின் மேலாண்மை, அனைத்து வாகனங்களின் பராமரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் 61 வாரங்கள் பயிற்சியை நிறைவு செய்தமைக்காக வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டிற்காக தன்னலமற்ற சேவையில் மகளிர் காவலர்கள் ஈடுபடும் போது, பல்வேறு சூழ்நிலைகளில் திறம்பட பணிபுரிவதற்கு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் பேருதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717027
-----
(रिलीज़ आईडी: 1717087)
आगंतुक पटल : 305