சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச சமுதாயத்தில் இருந்து பெற்ற கொவிட்-19 உபகரணங்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து திறம்பட ஒதுக்கி வருகிறது

Posted On: 07 MAY 2021 6:25PM by PIB Chennai

உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போரில், கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

பல்வேறு நாடுகள்/அமைப்புகளிடம் இருந்து 2021 ஏப்ரல் 27 முதல் மருத்துவப் பொருள்கள் மற்றும் உபகரணங்களை இந்திய அரசு பெற்று வருகிறது.

2933 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2429 ஆக்சிஜன் உருளைகள், 13 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 2403 சுவாசக் கருவிகள்/பி பாப்/சி பாப், 2.8 லட்சத்திற்கும் அதிகமான ரெம்டெசிவிர் குப்பிகள் இது வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.

2021 மே 6 அன்று பெறப்பட்ட முக்கியமான பொருள்களின் விவரம் வருமாறு:

1. நியூசிலாந்து

* ஆக்சிஜன் செறிவூட்டிகள் (72)

2. இங்கிலாந்து

* உருளைகள் (375)

3. ஜெர்மனி

* ஒரு நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

4. நெதர்லாந்து

* சுவாசக் கருவிகள் 450,

ஆக்சிஜன் செறிவூட்டிகள் 100

2021 மே 5 வரை பெறப்பட்ட அனைத்துப் பொருள்களும் மாநிலங்கள்/நிறுவனங்களுக்கு முறையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1716871

*****************



(Release ID: 1716919) Visitor Counter : 213