சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சர்வதேச சமுதாயத்தில் இருந்து பெற்ற கொவிட்-19 உபகரணங்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து திறம்பட ஒதுக்கி வருகிறது
Posted On:
06 MAY 2021 7:32PM by PIB Chennai
உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போரில், கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
தனது “ஒட்டுமொத்த சமுதாய” அணுகலின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்திய அரசு முன்னணியில் உள்ளது.
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் தலைமையில் நடைபெற்ற அதிகாரமளிக்கப்பட்ட குழு எண்.3-ன் கூட்டத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலாளர் திரு அமித் காரே, மத்திய செலவினங்கள் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன், வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் திரு தம்மு ரவி, சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் திருமிகு ஆர்தி அஹுஜா ஆகியோர் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கொவிட்-19 தொடர்பான பொருட்களை துரிதமாக விநியோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிவாரண பொருட்கள் ஒரு நாட்டில் இருந்து கிளம்பிய உடன், அது குறித்த தகவலை சுகாதார அமைச்சகத்திற்கு உடனடியாக வெளியுறவுத் துறை அனுப்புவதாக வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் தெரிவித்தார். அதன் பிறகு அவற்றை விநியோகிப்பதற்கான திட்டத்தை சுகாதார அமைச்சகம் வகுக்கும்.
பொருட்கள் இந்தியா வந்தடைவதற்குள் அவற்றை விநியோகிப்பதற்கான திட்டத்தை சுகாதார அமைச்சகம் வகுத்து விடுவதாக சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள்/அமைப்புகளிடம் இருந்து 2021 ஏப்ரல் 27 முதல் மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை இந்திய அரசு பெற்று வருகிறது.
1841 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1841 ஆக்சிஜன் உருளைகள், 9 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 2403 சுவாசக் கருவிகள்/பி பாப்/சி பாப், 2.8 லட்சத்திற்கும் அதிகமான ரெம்டெசிவிர் குப்பிகள் இது வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
2021 மே 5 அன்று பெறப்பட்ட முக்கிய பொருட்களின் விவரம் வருமாறு:
1. ஆஸ்திரேலியா
* சுவாசக் கருவிகள்/பி பாப்/சி பாப் (1056)
* ஆக்சிஜன் செறிவூட்டிகள் (43)
2. அமெரிக்கா
* ஆர்டிகே (40300)
* ரெம்டெசிவிர் (~1.56 லட்சம்)
* தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள்
3. பகரைன்
* திரவ மருத்துவ கொள்கலன் (02)
2021 மே 5 வரை பெறப்பட்ட அனைத்து பொருட்களும் மாநிலங்கள்/நிறுவனங்களுக்கு முறையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
***
(Release ID: 1716650)
Visitor Counter : 169