பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட்-19 தொடர்பான பொதுமக்கள் குறைகள் குறித்து மத்திய அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களுடன் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறையின் செயலாளர் ஆய்வு
Posted On:
06 MAY 2021 4:30PM by PIB Chennai
84 மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் குறைதீர்ப்பு அலுவலர்கள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களின் குறைதீர்ப்பு அலுவலர்களுடன் இரண்டு ஆய்வுக் கூட்டங்களை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறையின் செயலாளர் இன்று நடத்தினார்.
பெருந்தொற்று காலத்தில் குறித்த நேரத்தில் குறைகளை தீர்ப்பதற்காக அரசு பின்பற்றி வரும் கொள்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
பெருந்தொற்று தொடர்பான மக்களின் குறைகளை கண்காணிப்பதற்காக பிரத்தியேக கொவிட்-19 இணையதளம், ஒவ்வொரு குறைக்கும் ஒரு அடையாள எண், குறைகளை பதினோரு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்துதல், குறைகளை தீர்ப்பதற்கான கால அளவை 60 நாட்களில் இருந்து மூன்று நாட்களாக குறைத்தல், தானியங்கி நினைவுபடுத்தும் மின்னஞ்சல்கள் மற்றும் தினசரி அறிக்கை உருவாக்கம் ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
2020 மார்ச் 30 முதல் 2021 மே 3 வரையிலான காலக்கட்டத்தில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறையின் சிபி கிராம்ஸ் தளத்தில் 1.92 லட்சம் பொதுமக்கள் குறைகள் பெறப்பட்டு 1.66 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சகஙகள் மற்றும் துறைகள்
1.16 லட்சம் குறைகளுக்கு தீர்வு கண்டுள்ள நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 0.50 லட்சம் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளன.
2021 மார்ச் 1 முதல் 2021 மே 3 வரையிலான காலக்கட்டத்தில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறையின் சிபிகிராம்ஸ் தளத்தில் 14137 பொதுமக்கள் குறைகள் பெறப்பட்டு 9267 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
சிபிகிராம்ஸ் சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறையின் செயலாளர் கூறினார்.
மாநில மற்றும் மாவட்ட இணையதளங்களை சிபிகிராம்ஸ் உடன் இணைக்க வேண்டும் என்றும், குறைகளின் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து அமைப்புரீதியான சீர்திருத்தங்களை செயல்படுத்தி செயல்திறன்மிக்க குறைதீர்ப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பெருந்தொற்று காலத்தில் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அனைத்து குறைதீர்ப்பு அலுவலர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
*****************
(Release ID: 1716526)
Visitor Counter : 190