வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆக்சிஜன் உருளைகள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள்/கொள்கலன்களின் இறக்குமதி செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டது

Posted On: 05 MAY 2021 6:18PM by PIB Chennai

பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஆக்சிஜன் உருளைகள் மற்றும் கிரையோஜெனிக் டேங்கர்கள்/கொள்கலன்களை சர்வதேச உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை இந்திய அரசு ஆய்வு செய்தது.

கொவிட் பெருந்தொற்றின் காரணமாக, பதிவு மற்றும் ஒப்புதலுக்கு முன் சர்வதேச உற்பத்தியாளர்களின் தயாரிப்பு வசதிகளை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் நேரடியாக ஆய்வு செய்ய முடியவில்லை.

இதை கருத்தில் கொண்டு, உற்பத்தியாளர் விண்ணப்பித்தவுடன் எந்தவித தாமதமும் இல்லாமல் ஒப்புதல் வழங்குவதற்காக ஆன்லைன் முறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் விவரங்கள், ஐஎஸ்ஓ சான்றிதழ், உருளைகள்/டேங்கர்கள்/கொள்கலன்கள், வரைபடங்கள், பேட்ச் எண், ஹைட்ரோ பரிசோதனை சான்றிதழ் மற்றும் மூன்றாம் நபர் ஆய்வு சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

தகவல் ஏதேனும் தேவைப்பட்டால், திரு எஸ் டி மிஷ்ரா, வெடிபொருள் கட்டுப்பாட்டாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, (கைபேசி எண்: 9725850352, மின்னஞ்சல்: sdmishra@explosives.gov.in) மற்றும் டாக்டர் எஸ் கே சிங், வெடிபொருள் கட்டுப்பாட்டாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, (கைபேசி எண்: 8447639102, மின்னஞ்சல்: sksingh@explosives.gov.in) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

******************



(Release ID: 1716361) Visitor Counter : 263