பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

வன் தான் திட்டம்: பல்வேறு பயிற்சிகளின் வாயிலாக அதிக பயனடைந்துள்ளனர் ஒடிசா மாநில பழங்குடி மக்கள்

प्रविष्टि तिथि: 04 MAY 2021 4:22PM by PIB Chennai

பழங்குடி மக்கள் கூட்டுறவு சந்தைபடுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பான ட்ரைஃபெடின் கிராமங்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, டிரைஃபெட் அதிகாரிகள் மற்றும் மாநில திட்ட செயலாக்க முகமைகள் அடங்கிய குழுக்கள் வன் தான் விகாஸ் மையங்களின் தற்போதைய நிலை குறித்துத் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் இந்தத் திட்டம் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளது. 660 வன் தான் விகாஸ் மையங்கள், 22 வன் தான் விகாஸ் மைய தொகுப்புகளுடன் 6,300 பழங்குடி மக்கள் இதனால் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மூலப்பொருட்களை பதப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்வது, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பழங்குடி மக்களால் உற்பத்தி மற்றும் மூலப்பொருட்களை பதப்படுத்தும் பணிகள் இம்மாதத் துவக்கத்தில் தொடங்கின..

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715921

*****************


(रिलीज़ आईडी: 1715946) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Odia , Kannada