அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆகாயத் தாமரையிலிருந்து இயற்கைக்கு உகந்த யோகா தரைவிரிப்பு: அசாம் மாநில இளம் பெண்களின் புதிய முயற்சி
प्रविष्टि तिथि:
04 MAY 2021 1:14PM by PIB Chennai
அசாம் மாநிலத்தின் மீனவ சமூகத்தைச் சேர்ந்த 6 இளம் பெண்கள், ஆகாயத் தாமரையிலிருந்து, இயற்கைக்கு உகந்த மக்கும் தன்மையுடைய யோகாசன பயிற்சிக்கான தரைவிரிப்பை உருவாக்கியுள்ளனர்.
குவஹாத்தி நகரிலிருந்து தென்மேற்கில் உள்ள தீபோர் பீல் ஏரி, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஏரி, காலப்போக்கில் ஆகாயத் தாமரையின் அபரிமிதமான வளர்ச்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
பெண் சமூகத்தை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்கும் நெக்டர் எனும் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான வடகிழக்கு மையம், மேற்கொண்ட முயற்சிகளால் ஊக்கமளிக்கப்பட்டு, தீபோர் பீல் ஏரிக்கு அருகில் வசிக்கும் ஆறு பெண்கள், விரைவில் உலக சந்தைக்கு வரவுள்ள தனித்துவம் வாய்ந்த ‘மூர்ஹென் யோகா தரைவிரிப்பை' உருவாக்கியுள்ளனர்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீபோர் பீல் ஏரியின் நிலைத்தன்மை முதலியவற்றிற்கு வித்திடுவதுடன், அப்பகுதியின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715872
*********
(रिलीज़ आईडी: 1715919)
आगंतुक पटल : 289