ரெயில்வே அமைச்சகம்

ஹரியானா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் உத்திரப்பிரதேசத்துக்கு கூடுதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

Posted On: 30 APR 2021 4:00PM by PIB Chennai

ஹரியானா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் உத்திரப்பிரதேசத்துக்கு கூடுதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்துக்கு இரண்டாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், 4 டேங்கர் லாரிகளுடன் செல்லவுள்ளது. இந்த டேங்கர்கள்  பகோராவிலிருந்து சாகர் மற்றும் ஜபல்பூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதில் 47.37 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உள்ளது. மத்தியப் பிரதேசத்துக்கு இன்று மாலை இந்த ரயில் செல்கிறது.

ஹரியானா தனது முதல் ஆக்ஸிஜன் ரயிலை பெறவுள்ளது. ஒரு ரயில் ரூர்கேலாவில் இருந்து ஹரியானாவுக்கு 47.11 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை 3 டேங்கர்களில் கொண்டு செல்கிறது. மற்றொரு ரயில் ஆங்குலில் இருந்து ஹரியானாவுக்கு 32 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை 2 டேங்கர்களில் கொண்டு செல்கிறது.

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் உத்திரப் பிரதேசம் தொடர்ந்து ஆக்ஸிஜன் விநியோகத்தை பெற்று வருகிறது. உத்திரப் பிரதேசம் தனது 7வது ஆக்ஸிஜன் ரயிலை, விரைவில் பெறவுள்ளது.

இந்தியன் ரயில்வே இதுவரை 664 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது. ஹரியானாவும், தெலங்கானாவும், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விரைவில் ஆக்சிஜன் பெறவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715072

------



(Release ID: 1715169) Visitor Counter : 171