குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சிசேரியனை குறைக்கும் நடவடிக்கையில் தனியார் மருத்துவமனைகள் இறங்க வேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 30 APR 2021 12:37PM by PIB Chennai

பெண்களின் சுகாதாரத் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் ன்றும், சிசேரியனைக் குறைக்கும் நடவடிக்கையில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட வேண்டும் ன்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

பெண்களின் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கு சேவையாற்றிய ஐதராபாத்தைச் சேர்ந்த மகப்பேறு நிபுணர் டாக்டர் எவிதா பெர்னான்டஸுக்குயுத்விர் நினைவு விருதைகாணொலி மூலம் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

”பெண்களின் சுகாதாரத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டால், ஆரோக்கியமான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியாது. ஆரோக்கியமான சமுதாயத்துக்கு பெண்கள் அடித்தளம் அமைப்பதால், அவர்களின் ஆரோக்கிய தேவைகளில் கவனம் செலுத்த பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் பிரசவ இறப்பு வீதத்தை குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் பிரசவ இறப்பு வீதத்தை 1,00,000 பேருக்கு 70க்கும் கீழாக குறைக்கும் நோக்கில், .நா நிர்ணயித்த  3.1 ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கை அதிகரிக்க வேண்டும்இந்தியாவில் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் பிரச்னையைப் போக்க, ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தை பேறுக்கு டாக்டர். எவிதா பெர்னான்டஸ் சிறப்பான சேவை புரிந்துள்ளார். பெண்களின் மேம்பாடு மற்றும் சுகப் பிரசவத்துக்கு ஆதரவளிப்பவர் டாக்டர் எவிதா பெர்னான்டஸ். சுகப் பிரசவம் மூலம் குழந்தைகள் பிறக்கச் செய்ய அவர் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு, சிசேரியனைக் குறைக்கிறார்.

தெலுங்கானா அரசும், பெர்னான்டஸ் மருத்துவமனையும் யுனிசெப்புடன் இணைந்து அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதைக் குறைத்து, சுகப் பிரசவத்தை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இது பாராட்டத்தக்க பணி. இந்த நடவடிக்கையில் தனியார் மருத்துவமனைகளும் இணைய வேண்டும். மகப்பேறு சுகாதாரத்தை மேம்படுத்துவது மிக முக்கியம். தேசியளவிலான மகப்பேறு செவிலியர்களை உருவாக்கும் டாக்டர் எவிதாவின் முயற்சி பாராட்டத்தக்கது. தெலங்கானா அரசுக்காக, மகப்பேறு மருத்துவத்தில்,  1500 செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க பெர்னான்டஸ் அறக்கட்டளை உறுதி எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது”

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715003

*****

(Release ID: 1715003)


(Release ID: 1715083) Visitor Counter : 231