அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவியின் உற்பத்தியை அதிகரிக்க, நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்தது சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ

Posted On: 29 APR 2021 4:23PM by PIB Chennai

துர்காபூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் -  மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ), தான் உருவாக்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி  தொழில்நுட்பத்தை இன்று காணொலி காட்சி மூலம்சிஎஸ்ஐஆர் -சிஎம்இஆர்ஐ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஹரிஸ் ஹிரானி முன்னிலையில்  ராஜ்கோட்டில் உள்ள ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் குருகிராமில் உள்ள கிரிட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு பரிமாற்றம் செய்தது.

தற்போதை கொவிட் தொற்று சூழலில், குறிப்பாக ஆக்ஸிஜன் விநியோக உத்திகளை, மேம்படுத்துவதன் அவசியத்தை பேராசிரியர் ஹிரானி குறிப்பிட்டார்.  சராரியாக, ஒருவருக்கு 5-20 எல்பிஎம் காற்று, குறிப்பிட்ட சதவீத ஆக்ஸிஜனுடன் தேவை.  சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய தொழில்நுட்பம், வீட்டிலேயே ஆக்ஸிஜன் செறிவூட்டலை வழங்குகிறது. மிகப் பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சார்ந்திருக்க தேவையில்லை. சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி, நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுகிறது.

 

ஆக்ஸிஜன் செறிவூட்டல்  கருவி உற்பத்திக்கான உரிமத்தை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ, 4 நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக பேராசிரியர் ஹிரானி குறிப்பிட்டார்.  இந்த 4 நிறுவனங்களும், ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவியின் உற்பத்தியை 2021 மே 2வது வாரம் முதல் தொடங்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிரிட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு குப்தாசிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பத்தையும், தற்போதைய சூழலில் அதன் பயன்பாட்டையும் பாராட்டினார்.

ஆரம்பத்தில் தனது நிறுவனம் நாள் ஒன்றுக்கு 25 முதல் 50 கருவிகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும், உற்பத்தி வேகத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருவியின் மாதிரியை  ஒரு வாரத்தில் தயாரிப்பதாகவும், தேவைக்கேற்ப இதன் உற்பத்தியை அதிகரிப்பதாகவும்  ராஜ்கோட் ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உறுதிப்படுத்தினார்.  தற்போது இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவியின் தேவை அதிகமாக இருப்பதால், நாள் ஒன்றுக்கு 1000 கருவிகளை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714854

 

*****************


(Release ID: 1714886) Visitor Counter : 236