பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

‘‘சுகாதார பாதுகாப்புடன் கூடிய வாழ்வாதாரம்’’ குறித்து காணொலி காட்சி மூலம் டிரைஃபெட் ஆலோசனை

Posted On: 28 APR 2021 1:11PM by PIB Chennai

‘‘சுகாதார பாதுகாப்புடன் கூடிய வாழ்வாதாரம்’’ குறித்து 26 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் வன் தன் விகாஸ் கேந்திரா பிரதிநிதிகளுடன் இந்திய பழங்குடியினர் சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு(டிரைஃபெட்) காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இந்த கூட்டத்தில் சுமார் 600 பேர் பங்கேற்றனர். யுனிசெப் அமைப்பின் இந்திய தலைவர் சித்தார்த் ஸ்ரெஸ்தா மற்றும் அவரது குழு இந்த கூட்டத்தில் பங்கேற்று கொவிட் நெறிமுறைகளை விளக்கினர்.

மாநில அளவிலான நிலவரம் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு அந்த தகவல்கள் பகிரப்பட்டன.

2,224 தொகுப்புகளில் அமைக்கப்பட்ட 33,340 வன் தன் விகாஸ் கேந்திராக்களின் முழு பயனை அடையஅயராது உழைக்க  இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இந்த 2224 தொகுப்புகளில், அந்தந்த கிராமங்களில் கொவிட் நெறிமுறைகளை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.

கற்கவும், பின்பற்றவும், இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம், சுமார் 130 சிறந்த நடைமுறைகள்  பகிரப்பட்டன.

வன்தன் விகாஸ் கேந்திரா முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும்மேம்படுத்தவும், மாநில பங்குதாரர்களுடன் டிரைஃபெட் வாராந்திர கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

*****************



(Release ID: 1714631) Visitor Counter : 133