ரெயில்வே அமைச்சகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்: மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், தில்லிக்கு இதுவரை 450 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம்

Posted On: 27 APR 2021 5:00PM by PIB Chennai

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகிக்கும் பணியை இந்திய ரயில்வே தொடர்ந்து மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை 10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்து 450 மெட்ரிக் டன் பிராணவாயுவை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லிக்கு 6 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வாயிலாக 26 டேங்கர்களில் எடுத்துச் சென்றுள்ளது.

தற்போது ஜபல்பூர் வழியாக பொகாரோவிலிருந்து போபால் வரை மற்றொரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளது.

6 டேங்கர்களில் 64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், போபால் மற்றும் ஜபல்பூர் வாயிலாக மத்திய பிரதேசத்தின் பிராணவாயு தேவையை பூர்த்தி செய்யும்.

70 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ பிராணவாயுவுடன் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தில்லி சென்றடைந்தது.

இதுவரை முதற்கட்ட தகவலின்படி உத்தரப் பிரதேசத்துக்கு 202 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 174 மெட்ரிக் டன் மற்றும் தில்லிக்கு 70 மெட்ரிக் டன் பிராணவாயுவை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் மத்திய பிரதேசத்திற்கு 64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714366

------(Release ID: 1714394) Visitor Counter : 223