ஆயுஷ்

கொவிட்-19 புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Posted On: 26 APR 2021 8:25PM by PIB Chennai

பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளுக்காகவும், கொவிட்-19 பெருந்தொற்றின் போது சுய பராமரிப்புக்கான ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுய பராமரிப்பு மற்றும் வீட்டு மேலாண்மை நடவடிக்கைகள் மீது இந்த வழிகாட்டுதல்கள் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளன. பண்டைய ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ முறைகள், ஆராய்ச்சி படிப்புகள், பல்முனை குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் கொவிட்-19 நோயாளிகளுக்கான இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமையை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான நமது போருக்கு மேலும் வலு கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிக்குழுவுடன் அதிகாரமளிக்கப்பட்ட குழு நடத்திய விரிவான ஆலோசனைக்கு  பின்னர் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதள முகவரிகள் பின்வருமாறு:

https://main.ayush.gov.in/event/guidelines-ayurveda-practitioners-covid-19-patients-home-isolation

https://main.ayush.gov.in/event/ayurveda-preventive-measures-self-care-during-covid-19-pandemic

https://main.ayush.gov.in/event/guidelines-unani-practitioners-covid-19-patients-home-isolation

https://main.ayush.gov.in/event/guidelines-ayurveda-unani-practitioners-covid-19-patients-home-isolation-and-ayurveda-unani

https://main.ayush.gov.in/event/unani-medicine-based-preventive-measures-self-care-during-covid-19-pandemic

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714205

-----(Release ID: 1714230) Visitor Counter : 219