நித்தி ஆயோக்

கொவிட் மேலாண்மை குறித்து தொண்டு நிறுவனங்கள்/சமூக அமைப்புகளுடன் அதிகாரமளிக்கப்பட்ட குழு-3 ஆலோசனை

Posted On: 26 APR 2021 5:24PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக, சமீபத்தில் அதிகரித்துள்ள கொவிட் தொற்றுகளின் பாதிப்பை கடந்து வருவதற்கான ஒருங்கிணைந்த யுக்திகளை வகுப்பதற்காக ஒரு கோடிக்கும் அதிகமான சமூக சமுதாய அமைப்புகளை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட குழு-3 சென்றடைந்துள்ளது.

இது குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்/சமூக அமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே விஜயராகவன், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் உறுப்பினர் திரு கமல் கிஷோர் மற்றும் வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தது, தடுப்புமருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை, இரண்டு மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து சிக்கல்களுக்கான தீர்வு போன்ற, அரசு எடுத்த பல்வேறு சமீப நடவடிக்கைகள் குறித்து தொண்டு நிறுவனங்கள்/சமூக அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியாவில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக சமுதாய அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த், மத்திய/மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறும், மக்களிடையே கொவிட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், அரசு திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

indiafightscovid.com எனும் இணைய முகவரியில் உள்ள விழிப்புணர்வு பிரச்சாரங்களை பிராந்திய மொழிகளில் பதிவிறக்கம் செய்து கொவிட் குறித்த வதந்திகளை முறியடித்து, உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714157

-----


(Release ID: 1714208) Visitor Counter : 219