அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான பங்களிக்கும்: டாக்டர் வி ஆர் சிர்சாத்

Posted On: 26 APR 2021 3:11PM by PIB Chennai

ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் குறித்த இணையக் கருத்தரங்கு ஒன்றை சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ, துர்காபூர் மற்றும் எம்எஸ்எம்இ-டிஐ, ராய்ப்பூர், சத்தீஸ்கர், இந்திய அரசு ஆகியவை இணைந்து 2021 ஏப்ரல் 25 அன்று ஏற்பாடு செய்திருந்தன.

வரவேற்புரை ஆற்றிய எம்எஸ்எம்இ-டிஐ, ராய்ப்பூர், இணை இயக்குநர், டாக்டர் வி ஆர் சிர்சாத், கொவிட்-19 காரணமாக முன்னெப்போதும் இல்லாத பெருந்தொற்று நிலைமையை நாடு தற்போது எதிர் கொண்டு வருவதாகவும், மருத்துவ ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான பங்களிக்கும் வாய்ப்புள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இந்த உபகரணத்தை விரைந்து உற்பத்தி செய்யுமாறு கருத்தரங்கில் பங்கேற்ற தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முனைவோர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிராணி, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணத்தை சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ உருவாகியுள்ளதாகவும், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக இதை வைக்க முடியும் என்றும் கூறினார்.

இதை தயாரிக்க முன் வருபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்களை சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714106

-------



(Release ID: 1714135) Visitor Counter : 194