பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ அதிகாரிகள் பி.எச்.டி ஆய்வு மேற்கொள்ளலாம்: தரைவழிப்போர் ஆய்வு மையம்(கிளாவ்ஸ்) அறிமுகம்

Posted On: 19 APR 2021 6:01PM by PIB Chennai

ராணுவ அதிகாரிகளுக்காக பி.எச்.டி ஆய்வு படிப்புகளை நடத்த, இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் தரைவழிப் போர் ஆய்வு மையம்(CLAWS), மணிப்பால் பல்கலைக்கழகம் என முன்பு அழைக்கப்பட்ட மங்களூர் மணிப்பால் உயர் கல்வி அகாடமியுடன் (MAHE) இணைந்து கூட்டு நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளின் தொழில் ரீதியான ராணுவ கல்வியை மேம்படுத்தகிளாவ்ஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆழ்ந்த அறிவுள்ள ராணுவத் தலைவர்கள் உருவாக்கப்பட்டு, நாடு பயனடையும். 

இந்தத் திட்டத்தின் கீழ், கிளாவ்ஸ் மையம், மணிப்பால் உயர்கல்வி அகாடமியின் துணை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளாவ்ஸ் மைய பேராசிரியர்கள் 5 பேர், துணை மேற்பார்வையாளர்களாக செயல்படுவர்.

இந்த பி.எச்.டி ஆய்வு படிப்புகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை தேர்வு செய்வது, ஆய்வு படிப்புகளுக்கான முறைகள் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மற்றும் மங்களூர் மணிப்பால் உயர் கல்வி அகாடமியின் வழிகாட்டுதல்களுடன் கிளாவ்ஸ் மையம் மேற்கொள்ளும்.

இது தொடர்பான விவரங்கள், விண்ணப்பங்கள் ஆகியவை கிளாவ்ஸ் இணையதளத்தில் (https://www.claws.in/)  “UNIVERSITY CELL” என்ற தலைப்பின் கீழ் உள்ளது. விருப்பமுள்ள ராணுவ அதிகாரிகள், தங்கள் விண்ணப்பங்களை 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்பும்படி கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.

*****************



(Release ID: 1712708) Visitor Counter : 144