சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கொவிட்-19 நிலவரம் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு செய்தார்

Posted On: 16 APR 2021 4:14PM by PIB Chennai

சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கொவிட்-19 நிலவரம் மற்றும் அம்மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் கொரோனா மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் திரு ராஜேஷ் பூஷனுடன் இணைந்து மத்திய உள்துறை செயலாளர் திரு அஜய் குமார் பல்லா இன்று தலைமை வகித்தார்.

நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால்இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் (பேராசிரியர்) சுனில் குமார் மற்றும் இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர்கள் மற்றும் சுகாதார செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை (குறிப்பாக பிராணவாயு வசதி கொண்ட படுக்கைகள்) மற்றும் இதர மருத்துவமனை உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்ளிட்ட கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள முட்டுக்கட்டைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மக்களின் அத்தியாவசியமற்ற போக்குவரத்தை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

மேலும், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல்; தொற்று கண்டறிதல், கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு; மருத்துவ சிகிச்சை மற்றும் ஆதரவு வழிமுறை; பாதுகாப்பான கொவிட் நடத்தை விதிமுறை; மற்றும் தகுதியுடைய அனைவருக்கும் 100 சதவீத தடுப்புமருந்து வழங்கல் ஆகிய ஐந்துமுனை யுக்தி மீது தீவிர கவனம் செலுத்துமாறும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712248

------



(Release ID: 1712299) Visitor Counter : 221