ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல்: விலையும் குறைகிறது

Posted On: 14 APR 2021 4:54PM by PIB Chennai

ரெம்டெசிவிர்  கிடைப்பதில் உள்ள பிரச்சனை குறித்து மத்திய ரசாயணத்துறை இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இதர தரப்பினருடன் கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆலோசனை நடத்தினார்.

இதில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி/விநியோகத்தை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் முடிவுகள்  எடுக்கப்பட்டன.

தற்போதுள்ள 7 ரெம்டெசிவிர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒரு மாத உற்பத்தி திறன் 38.80 லட்சம் குப்பிகளாக  உள்ளன.    கூடுதலாக  7 இடங்களில் மாதத்துக்கு 10 லட்சம் குப்பிகளை உற்பத்தி செய்ய 6 நிறுவனங்களுக்கு விரைவு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதத்துக்கு 30 லட்சம் குப்பிகள் தயாரிக்கும் திட்டம் தயாராகிறது.   இந்த நடவடிக்கை, ரெம்டெசிவிர் தயாரிப்பு திறனை மாதத்துக்கு 78 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கும்.

உள்நாட்டு சந்தையில் ரெம்டெசிவிர் விநியோகத்தை அதிகரிக்க, கூடுதல் நடவடிக்கையாக, ரெம்டெசிவிர், ஏபிஐ மருந்துகள் ஏற்றுமதிக்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் கடந்த 11ம் தேதி தடைவிதித்துள்ளதுமத்திய அரசின் தலையீட்டின் படி, ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 4 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் உள்நாட்டு தேவைக்கு தற்போது  திருப்பிவிடப் பட்டுள்ளது

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக, ரெம்டெசிவிர் மருந்தின் விலையை இந்த வார இறுதியில் ரூ.3.500/-க்கும் கீழ் குறைக்க ரெம்டெசிவிர் தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்துள்ளனர்மருத்துவமனைகளுக்கான விநியோகத்தை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கும்படி ரெம்டெசிவிர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அமலாக்க அதிகாரிகளுக்கு இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை தேசிய மருந்துகள் விலை ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711808

-------(Release ID: 1711870) Visitor Counter : 205