தேர்தல் ஆணையம்

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவுற்றது

Posted On: 06 APR 2021 6:54PM by PIB Chennai

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலின் ஒரே கட்ட வாக்குப்பதிவும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்டசபைகளுக்கு நடைபெறும் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியான முறையில் இன்று நடைபெற்றது.

மொத்தம் 475 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,53,538 வாக்குப்பதிவு மையங்களில்  இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

கொரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில் கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.

அனைவரும் பங்கு பெறும் மற்றும் அனைவரும் அணுகக்கூடிய தேர்தலை உறுதி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தபால் வாக்கு வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது.

இந்த வாக்காளர்களுக்கு முறையான வசதிகள் வழங்கப்பட்டதை களத்தில் உள்ள பார்வையாளர்கள் உறுதி செய்தனர்.

விதிகளின்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக கடந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இவை சோதிக்கப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஒருமுறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சோதித்து பார்க்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள், நேரடி ஒளிபரப்பு முறையில் கண்காணிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709905

----

 


(Release ID: 1709928)