தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தேதிக்கு 72 மணி நேரத்துக்கு முன்பும் பைக் பேரணிக்கு தடை

Posted On: 22 MAR 2021 4:33PM by PIB Chennai

தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தினத்துக்கு முன்பாகவும், வாக்காளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த, சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் , பைக்குகளை பயன்படுத்துகின்றனர் என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் தேதி அன்று அல்லது தேர்தல் தேதிக்கு 72 மணி நேரம் முன்பாக, பைக் பேரணிகளை அனுமதிக்க கூடாது என முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பான அறிவுறுத்தல்கள், தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் https://eci.gov.in -லும் இந்த அறிவுறுத்தல்கள் உள்ளன.

*****************

 


(Release ID: 1706661) Visitor Counter : 147