குடியரசுத் தலைவர் செயலகம்

நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொழில்துறை மேம்பாடுடன் வலுவான சமூக பொருளாதார அமைப்பும் அவசியம்: குடியரசுத் தலைவர்

Posted On: 21 MAR 2021 7:16PM by PIB Chennai

ஒரு நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொழில்துறை மேம்பாடுடன் வலுவான சமூக பொருளாதார அமைப்பும் அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ரூர்கேலா எஃகு ஆலையில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையை இன்று (மார்ச் 21, 2021) திறந்து வைத்து பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

நம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் ரூர்கேலா எஃகு ஆலை மிக முக்கிய பங்கு வகித்திருப்பதாக அவர் கூறினார். ஒரு நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தொழில்துறை மேம்பாடுடன் வலுவான சமூக பொருளாதார அமைப்பும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதுநாள்வரை இந்தப் பகுதியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை வசதி இல்லாமல் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 இந்த மருத்துவமனை, ஒடிசா மாநிலத்தின் சிறப்பு பல்நோக்கு மருத்துவ தேவைகளை மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் தேவைகளையும் நிறைவேற்றும் என்று அவர் கூறினார்.

 

சிறந்த ஆளுகை இரண்டு முக்கிய தூண்களைக் கொண்டுள்ளது. அது கல்வி மற்றும் சுகாதாரம். மனித நாகரிகத்தில் இரண்டுமே அபரிமிதமான பங்கு வகித்துள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

எனினும் கடந்த ஆண்டுகளில் சுகாதாரத்தின் முக்கியத்துவம் உலகளவை எட்டியது. கொவிட்-19 பெருந்தொற்று அதன் கொடூரமான ரூபத்தை உலகமெங்கும் பரப்பியுள்ளது. இந்த சவாலான தருணத்தில் நமது மருத்துவ பணியாளர்கள் கண்களுக்குப் புலப்படாத எதிரியை எதிர்த்து திறம்பட போராடியுள்ளனர்.

விஞ்ஞானிகளின் அயராத உழைப்பையும் அவர் பாராட்டினார். அவர்களது தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் தடுப்பூசிகளின் உற்பத்தியில் மட்டுமே இந்தியா தன்னிறைவு அடையவில்லை, இன்று பல்வேறு நாடுகளுக்கும் நாம் தடுப்பூசிகளை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ விநியோகம் செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706454

                                                                                         ------



(Release ID: 1706476) Visitor Counter : 157