பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மேன்மைமிகு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரிடையே தொலைபேசி உரையாடல்

Posted On: 10 MAR 2021 7:04PM by PIB Chennai

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மேன்மைமிகு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

2019-ம் ஆண்டு நிறுவப்பட்ட இருதரப்பு மூலோபாய கூட்டுக்குழுவின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த இரு தலைவர்களும், இந்தியா-சவுதி உறவில் ஏற்பட்டு வரும் தொடர் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான தொழில் மற்றும் முதலீட்டை மேலும் விரிவுப்படுத்தும் தமது விருப்பத்தை வெளிப்படுத்திய பிரதமர், சவுதி முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் அளிக்கும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையேயான சிறப்பு நட்பு மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை கருத்தில் கொண்டு, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான ஒருவரது முயற்சிகளை மற்றவர் தொடர்ந்து ஆதரிக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.

இந்தியாவுக்கு விரைவில் வருகைத்தருமாறு சவுதி அரேபியாவின் மேன்மைமிகு பட்டத்து இளவரசருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

*****************


(Release ID: 1703957) Visitor Counter : 217