சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் 19 தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் செயல் திறன் மிக்கது : அமைச்சர் பதில்

Posted On: 09 MAR 2021 1:16PM by PIB Chennai

கொவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என மாநிலங்களவையில்  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் அவர் கூறியதாவது:

நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுக்கு, தடுப்பூசி அவசரமாக தேவைப்பட்டதால், புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள்  விதிகளின்படிகொவிட்-19 தடுப்பூசிகளை தயாரிக்க நிபுணர் குழுவுடன் ஆலோசித்து மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. 

கோவாக்சின் தடுப்பூசி பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் 3 கட்ட பரிசோதனை அறிக்கைகளை தாக்கல் செய்தது. இவற்றை மத்திய மருத்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, நிபுணர்களுடன் ஆராய்ந்து, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என்பதை கண்டறிந்தது.

இதையடுத்து அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக, கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதே போல் புனேவில் உள்ள இந்திய சீரம் மையமும், இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் பரிசோதனை அறிக்கைகள், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றை தாக்கல் செய்தது.

இதை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவும், மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் தயாரிப்பு ஒழுங்குமுறை ஆணையமும்  ஒப்பிட்டு ஆராய்ந்தது. 

மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, கோவிஷீல்டு தடுப்பூசியை இந்திய சீரம் மையம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

*****************



(Release ID: 1703595) Visitor Counter : 253